Monday, July 18, 2011

வரதட்சனை - தயவு செய்து சிரமம் பாராமல் படியுங்கள்.

FORWARDED MAIL:



வரதட்சனை என்ற கொடுமையான சமூக தீமையை இந்த முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்காதவரை இத்தகைய நிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும். அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்று கூறும் பொழுதுமானங்கெட்ட நம் முஸ்லிம் இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால்  வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.
வரதட்சணை கொடுமை திருமணத்துடன் முடிவதில்லை-
மகளை திருமணம் முடித்த மருமகனுக்கு வேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு வேலை வாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும். அல்லது வெளிநாடு செல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து, அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.
   இவன் மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம் அதன் காரணமாக கருவை (வாரிசுகளை) மனைவி சுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ செலவு வரை – அவனுடைய மனைவியை பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த மாதிரியான இழிவான ஆண் பிறவிகளுக்கு எதற்கு வாரிசுகள்?. இந்த மாதிரியான கேடுகெட்டவர்களின் வாரிசுகளை மனைவியானவள் கருவிலேயே அழித்து விட வேண்டும். அதன் மூலம் தம் பெற்றோரின் சுமையை அவளால் குறைக்க முடியும். அதிலும் பெண்குழந்தை பிறந்து விட்டால் அந்த பிறந்த பெண் குழந்தைக்கு இவ்வளவு நகை போட்டால்தான் தன் மனைவியையும் குழந்தையையும் அழைத்து போவானாம். என்பது கொடுமையிலும் கொடுமை
  சொந்த வீடு இல்லாதவனாக இருந்தால் அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம் பண்ணுவானுங்க. மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது – அவர்கள் குடும்ப விஷயத்தில் எல்லாவற்றிலும். தலையிடுவது  தன்னுடைய சுய நலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும் முடிவுகளில் சுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள்.
     அதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்.... சித்தி வீட்டிலோ அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து வளர்ந்தானோ அந்த வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் மனைவிக்கு கண்ணியம் கொடுத்து தன் வீட்டுக்காரியாக – தன்இல்லத்துக்கு அரசியாக இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாக ஆக்கிவிடுகிறான்.          
  அதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும். என்பதில் அவன் செய்யும் தவறு ( கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே அன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும் அதிகமோ.  அதை விட்டு விட்டு தன் பெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனை அவனுடைய வீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடைய அண்ணன் தம்பியால் அவளுக்கு எற்படும் (கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க முடியவில்லை என்றால் நாடு திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க முடியாமல் இந்த புருஷனே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் மனைவியின்  மிகக்கொடுமையான நிலைமை.   
 இதையெல்லாம் தன்னை ஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை என்று பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும்.
  பெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண டிரஸ் முதல் செருப்பு வரை வாங்கி போட்டுக்கிட்டு, உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, உன் குடும்பத்தாரும் உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத்த சாப்பாட்டை திண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நாகை துணிமனிகளுடன் வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு என்று இவ்வளவையும் உனக்கு கொடுத்து உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி நடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படி நடத்துகிறார்கள். என்று சிந்தித்து பார்.  
(கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண உனக்கு அருகதை இருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர)
நீ நியாயமான மனிதனாய் இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம் உண்டு என்று நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு. 
உண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்த உழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை பேணுவோம் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து.  உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான முஸ்லிமாக மரணிப்போம். அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோமாக!!!!
   முதலில் இதை பற்றி நாம் வாய் கிழிய பேசுவதற்கு முன் - நாம் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்தோமாஅல்லது அறியாத பருவத்தில் வாங்கியிருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து அதை திரும்பவும் அந்த பெண் வீட்டாரிடையே கொடுத்து விட்டோமாநமது பிள்ளைகளுக்கு நாம் வரதட்சனை வாங்காமல் அல்லது வரதட்சனை கொடுக்காமல் திருமணம் செய்து வைத்தோமா என்பதையெல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் திருமறையில் நீங்கள் செய்யாததை ஏன் மற்றவர்களுக்கு சொல்கிறீர்கள் என கடும் கோபம் கொள்கிறான்.
 முதலில்பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்கிறான் மஹர் கொடுக்காமல் -  வரதட்சனை வாங்கி திருமணம் செய்வதால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்னென்ன என்ற அடிப்படையான விழயங்களை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.



Grabbed from forwarded Mail.....

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா? - முஸ்லிம்கள் கவனத்திற்கு...


அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்? 

அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

பதிவிற்குள் செல்லும்முன்,  நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.

பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.

பதிவிற்குள் செல்வோம். 

திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர். 

அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது. 

பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1). 

நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது. 

---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.

எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது, 
‍'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்' 
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால்என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.

திருமணப் பேச்சுக்கள் வருவதும், இஸ்லாமிய சிந்தனை உள்ள, நபி வழியில் உறுதிப்பாட்டோடு இருக்கும் மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் இஸ்லாமிய சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்). 

இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ். 

ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் நபி வழியில் உறுதிப்பாட்டோடு இருக்கும் மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு, 

'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன். 

என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)

அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ, நபி வழியில் உறுதிப்பாட்டோடு இருக்கும்  பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்! 

(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு நபி வழியில் உறுதிப்பாட்டோடு இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :) 

அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!

என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். 
'எனக்கு நபி வழிக்  கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது' 
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள். 

மேலும், 
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது' 
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள். 

ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன. 

சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது. 

என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!

'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.

'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை. 

பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :) 

குறிப்பு: 

மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள். 

(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன். 

மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)

மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.

என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.

மஅஸ்ஸலாமா!(9)

அன்பு சகோதரி.
--------------------------

அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள். 

  • பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும், 
  • தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,    
  • இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும், 
இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக... 

இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன். 
Please Note:

ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.

அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.

பின்வருவது தான் அந்த பின்னணி.

நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன், 

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
 1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது.
3. துஆ - பிரார்த்தனை.
4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை.
5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.
6. வலிமா - திருமண விருந்து.
7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்.
8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.
9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்வதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள்.   


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Grabbed from the Below Link: 
 http://ethirkkural.blogspot.com/2011/05/blog-post_30.html#comment-form

Tuesday, December 16, 2008

இந்திய ஜன நாயகம் எங்கே ?

நண்பர்களே,,,,,

     கடந்த வாரம் மும்பையில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனது ரத்தமே உறைந்துவிடும்போல இருந்தது. காரணம், AK47 வகையான பயங்கரமான ஆயுதங்களைக்கொண்டிருந்த இவர்களை எதிர்க்கப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் கையிலிருந்ததோ பழங்காலத்து வெள்ளையர்காலத்தில் அளிக்கப்பட்ட துப்பாக்கி. இதைக்கொண்டு எந்த நம்பிக்கையிலும், தைரியத்திலும் இந்தப்படையினர் தீவிரவாதிகளை எதிர்கொள்கிறார்கள் என்று என்னைப்போலவே ஆயிரக்கணக்கானவர்கள் வியப்படைந்திருப்பார்கள். பாரதநாட்டில், மக்கள் நல்லவர்கள், அவர்களிடம் தேசபக்தியும் மிக்க உண்டு. இல்லாத ஒன்று நல்ல நிர்வாகிகளே. விஞ்ஞானம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இக்காலத்தில், அரசின் பாதுகாப்புத்துறையும், தங்களை முன்னோடியாக்கிக்கொள்ள வேண்டும். காரணம், அரசின் மீது நம்பிக்கை கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள். எல்லா விஷயத்திலும், லஞ்சம், ஊழல், அராஜகம், இடஒதுக்கீடு, சிக்கனம் என்று ஆகிவிட்டால், நாடு மற்றும் மக்களது பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதை மும்பைச்சம்பவம் அப்பட்டமாக காட்டிவிட்டது. ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபின்னும் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும், உதவித்தொகை அறிவிப்பதையும் விட, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத்தடுப்பதே சாலச்சிறந்தது. புதிய உளவு அமைப்பை ஏற்படுத்துவதை வரவேற்றாலும், அது வழக்கமான சம்பிரதாயமாக இல்லாமல், உண்மையான ஆபத்தை மனத்தில் கொண்டு செயல்பட அரசு வழிவகை செய்யவேண்டும். முக்கியமாக, இந்த அமைப்புகளுக்கு போதிய முடிவெடுக்கும் அதிகாரம், நிதி, பயிற்சி எல்லாம் வழங்கப்படவேண்டும். மும்பைச்சம்பவத்தால், 4000 கோடி இழப்பு என்பதை அறிகிறோம். இந்தளவு இழப்பதற்கு பதிலாக, சுமார் நூறு கோடியை செலவிட்டு, நாட்டின் பாதுகாப்புக்காக தரமான ஆயுதங்கள், ஹெலிகாப்டர், வாகனங்கள், தகவல் தொடர்புச்சாதனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்குச்செலவழிப்பதில் தவறில்லை. எல்லாவற்றிற்கும், ஒருமித்த கருத்து என்று அரசு தப்பிப்பதற்கு பதில், துணிச்சலான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும். இது நடக்காதவரையில், நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதிகளின் தயவில் இருக்கவேண்டியதே.


நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறை கிடையாது .

நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.

ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்? யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது போன்று தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.

ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.

எக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.

இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.

இன்னொரு கொடுமையும் உண்டு.

பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.

இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.

இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.

இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.

இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.

இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.

இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன.. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.

நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்?

ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்...

ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு,

நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.


தனிமனித ஓழுக்கம் இல்லை, எப்படி ஜன நாயாகம் ஜெயிக்கும்.
எதிலும் லஞ்சம், எங்கும் லஞ்சம், எதற்க்கெடுத்தாலும் லஞ்சம்,
Birth certificate வாங்குவதற்கு லஞ்சம்,
Death Certificate வாங்குவதற்கு லஞ்சம்,
Bank loan வாங்குவதற்கு லஞ்சம்,
passport verification வாங்குவதற்கு லஞ்சம்,
Gas connection வாங்குவதற்கு லஞ்சம்,
EB connection வாங்குவதற்கு லஞ்சம்,
Two wheeler license வாங்குவதற்கு லஞ்சம்,
house registration வாங்குவதற்கு லஞ்சம்,
school admission வாங்குவதற்கு லஞ்சம்,
Hospital admission வாங்குவதற்கு லஞ்சம்,
Insurance money வாங்குவதற்கு லஞ்சம்,
போங்கய்யா வாழ்க்கை வெறுத்து போச்சு.....

இப்படி இந்தியா இன்றைக்கு இருக்கும்போது. எப்படி மனசாட்சி இல்லாமல் ஜன நாயகம் வென்றது, ஜன நாயகம் வாழ்க, ஜன நாயகம் இனிக்கிறது என்று சொல்லமுடிகிறது.

கேவளம்....


மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.

வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்..

முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.

தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ?

இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.

இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.

இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.

இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.

இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.

மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.

ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.

ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்..

இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.


உளவுத்துறையின் இந்த நிலைக்கு காரணம் யார்? இத்துப்போன பழைய துப்பாக்கியை கொடுத்து போராட்டத்துக்கு அனுப்பினால் யாராவது போருக்கு செல்லத் துணிவார்களா? இல்லை அப்படியே நவீன ஆயுதங்கள் கொடுத்தாலும் அவர்களால் சுதந்திரமாக செயல் பட முடியுமா? நாட்டுக்காக உயிர் நீத்த ஒருவருக்கு இரங்கல் செய்தி வெளியிடக் கூட ஒரு முதலமைச்சருக்கு நேரம் இல்லை. எதிர் கட்சிகளில் கூக்குரலுக்கு பிறகு நேரில் வந்து ஆறுதல் கூறும் ஒரு ஸ்டண்ட்.

கர்நாடகாவில் சர்ச்சுகளின் மீது யார் தாக்குதல் நடத்தினார் என்று கண்டறிய உளவுத்துறை வேண்டும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறதென்றால் எதிர்கட்சியினரை கண்காணிக்க உளவுத்துறையினர் வேண்டும், இல்லை ஒவ்வொரு எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் கூட்டங்களை ஒட்டு கேட்பதற்கு உளவுத்துறையினர் வேண்டும். அப்போது தான் தேவைப் படும் நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்தலாம். இப்படி இவர்கள் குப்பை அரசியல் வாதிகளால் செருப்பு போல நடத்தப் படும் பொது எப்படி இவர்கள் மக்களுக்காக செயல் படமுடியும்?
அப்படியே ஒருவேளை இவர்கள் வீரமாக செயல் பட்டால் இவர்களை எதிர்த்து குரல் கொடுக்க எதிர் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகள் இருக்கின்றதே. பல ஆண்டுகளாக பல அரசாங்கத்தினால் பிடிக்க முடியாத வீரப்பனை திரு விஜய குமார் சுட்டு பிடித்தார் (அல்லது பிடித்து சுட்டார்). இப்போது அவர்எங்கே இருக்கிறார் ? எப்படி நடத்தப் படுகிறார்? இப்படி போராடி பிடித்த பல திருடர்கள் மற்றும் தீவிரவாதிகள் அரசியல் காரணத்தாலோ, பிணைக் கைதி மிரட்டல் களாலோ விடுவிக்கப் பட்ட பல நிகழ்வுகள் இங்கு உண்டு.

முதலில் இவர்கள் அரசியவாதிகளால் நடத்தப் படுவது கூடாது. அதன் பிறகு இவர்களில் சேவையை நல்ல முறையில் மதிக்கப் படவேண்டும். இன்று ராஜ் தாக்கரே ,பால் தாக்கரே  மற்றும் காடுவெட்டி குருவை தெரிந்த அளவுக்கு கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் பெயர் கூட தெரியாது.
ஒருவருடைய தியாகங்கள் மதிக்கப் படும் வரை, பாதுகாப்பு துறைகள் (காவல், உளவு மற்றும் இராணுவம்) சுதந்திரமாக செயல் படும் வரையில் இதே நிலைதான் தொடரும்.


சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்

Written by,

ச.முகம்மது நபீஸ்,
குவைத்திலிருந்து...